சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Ganesha Bhajans     

Shivan Bhajans     

Murugan Bhajans     

Durga Bhajans     

Krishna Bhajans     

Karuppar Bhajans     

விநாயகர்   - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பரா சக்தி  
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

கணபதி ராயன் - அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே - விடுதலை
கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சொல்லுக் கடங்காவே - பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் பரா சக்தி
வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

வெற்றி வடிவேலன் - அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்,
சுற்றி நில்லாதே போ! - பகையே!
துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

தாமரைப் பூவினிலே - சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே - குழலிசை
வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வ மெல்லாந் தருவாள் நம தொளி
திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
Add (additional) Audio/Video Link
Other விநாயகர் songs

15 - ஓம் கணேச பாஹிமாம் (விநாயகர் )

57 - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பரா சக்தி (விநாயகர் )

14 - கணேச சரணம் (விநாயகர் )

50 - கலைநிறை கணபதி சரணம் (விநாயகர் )

13 - தொந்தி கணபதி (விநாயகர் )

12 - பிள்ளையார் பிள்ளையார் (விநாயகர் )

19 - பொம்ம பொம்மதா தைய (விநாயகர் )

11 - மங்களத்து நாயகனே (விநாயகர் )

This page was last modified on Sun, 03 Mar 2024 19:53:03 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

bhajan song